ஜெயலலிதா வீட்டிற்கு பின்புறம் குடியேறிய ஓபிஎஸ்
முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று க்ரீன்வேஸ் சாலை அரசு வீட்டை காலி செய்துவிட்டு ஆழ்வார்பேட்டைக்கு குடியேறினார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் முதல்வராக பொறுப்பேற்றிருந்த ஓபிஎஸ் அவர்கள் சசிகலாவின் கட்டாயத்தினால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் சசிகலாவுக்கு எதிராக அதிமுக மூத்த தலைவர்களை ஒன்றிணைத்த ஓபிஎஸ் தற்போது தனி அணியாக செயல்பட்டு வருகிறார்
இந்நிலையில் முதல்வர் நிதியமைச்சர் மற்றும் முதல்வர் பதவியில் இருந்த ஓபிஎஸ் அவர்களுக்கு அரசு சார்ப்பில் க்ரீன்வேஸ் சாலையில் வீடு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அவர் எம்.எல்.ஏ பதவியில் மட்டும் இருப்பதால் உடனடியாக வீட்டை காலி செய்யும்படி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் துறையான பொதுப்பணித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த நோட்டீஸ் காரணமாக இன்று க்ரீன்வேஸ் சாலை வீட்டை காலி செய்த ஓபிஎஸ், போயஸ் கார்டன் பகுதியிலுள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்கு பின்புறம் இருக்கும் ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள புது வீட்டில் குடியேறினார்.