36 வருடங்களுக்கு பின் மீண்டும் திரையுலகில் உஷா ராஜேந்தர்
டி.ராஜேந்தர் இசையமைப்பாளராக அறிமுகமான ‘ஒரு தலை ராகம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த உஷா, அதன் பின்னர் ஒருசில படங்களில் நடித்திருந்தாலும் டி.ராஜேந்தரை திருமணம் செய்த பின்னர் திரையுலகில் இருந்து விலகினார்.
இந்நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் சிம்பு இசையமைக்கும் ‘சக்க போடு போடு ராஜா’ படத்தில் ஒரு பாடலை பாடி மீண்டும் திரையுலகிற்கு ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார்
வா முனிம்மா வா’ என்று தொடங்கும் இந்த பாடலை உஷாராஜேந்தருடன் டி.ராஜேந்தரும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இந்த படத்தில் அனிருத், யுவன்ஷங்கர் ராஜா ஆகியோர் தலா ஒரு பாடலை பாடியுள்ளனர். மேலும் இந்த படத்தில் பிரபல பாடகர் உன்னிகிருஷ்ணன் மகனும் பாடகராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தானம், வைபவி, விவேக், விடிவி கணேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை சேதுராமன் இயக்கி வருகிறார்.