அந்தமானில் பயங்கர நிலநடுக்கம். சுனாமி எச்சரிக்கையா?
அந்தமான் நிக்கோபார் தீவுகளில், இன்று காலை 8.20 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கியதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகி உள்ளது.
இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. எனவே சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
இருப்பினும் அந்தமான் பகுதி மக்கள் ஒருவித அச்சத்துடனே பூமியை பார்த்து வருவதாக அங்குள்ள உள்ளூர் தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டு வருகின்றன.