பிரபல நடிகையின் கணவர் கடன் தொல்லையால் தற்கொலை
ரஜினி, கமல் படங்கள் உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஜெயசுதா. இவர் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் நிதின்கபூர் என்பவரை கடந்த 1995ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஷ்ரேயன், நிஹர் என்ற இருமகன்கள் உள்ளனர்.
சமிபத்தில் நிதின்குமார் தனது மகன் ஷ்ரேயன் நடித்த இந்தி படம் ஒன்றை தயாரித்தார். இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தாலும் படம் வசூல் அளவில் படுதோல்வி அடைந்தது.
இதனால் கடந்த சில நாட்களாகவே நிதின்குமார் கடும் நிதிநெருக்கடி காரணமாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று திடீரென நிதின்குமார் தற்கொலை செய்து கொண்டார்.
காவல்துறையினர்களின் வழக்கமான விசாரணைக்கு பின்னர் நிதின்குமார் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அவருடைய உடல் இன்று மாலை மும்பையில் தகனம் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நடிகை ஜெயசுதா ரஜினி நடித்த ‘பாண்டியன்’, கமல் நடித்த சொல்லத்தான் நினைக்கின்றேன், மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே உள்பட பல தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.