கோவா மாநிலத்தில் பாஜக ஆட்சி. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்

கோவா மாநிலத்தில் பாஜக ஆட்சி. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்

நடைபெற்று முடிந்த கோவா சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததல் சிறு கட்சிகளின் ஆதரவுடன் பாஜக அரசு அமைக்க முன்வந்தது. பாஜகவின் மூத்த தலைவரும் பாதுகாப்பு அமைச்சருமான மனோகர் பாரிக்கர் முதல்வராக பொறுப்பேற்றார்.

இந்நிலையில் இன்று அவர் சட்டமன்றத்தை கூட்டி நம்பிக்கை வாக்கு கோரினார். முதல்வரின் ஆட்சிக்கு ஆதரவாக 22 எம்.எல்.ஏக்களும், எதிராக 16 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். இதனால் மனோகர் பாரிக்கர் அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

சிறு கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் , சுயேட்சைகள் ஆகியோர்களின் ஆதரவில் ஆட்சி அமைத்தாலும் மனோகர் பாரிக்கர் தற்போது எம்.எல்.ஏஆக இல்லை. எனவே அவர் ஆறு மாதங்களில் எம்.எல்.ஏ ஆகவேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply