முன்னாள் தென்கொரிய அதிபரின் மகளை நாட்டை விட்டு விரட்டிய டென்மார்க்
சமீபத்தில் நீதிமன்ற உத்தரவு காரணமாக அதிரடியாக பதவிநீக்கம் செய்யப்பட்ட தென்கொரிய அதிபர் பார்க் கியூன் ஹை அவர்களின் மகளை டென்மார்க் அதிரடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் தென்கொரிய அதிபர் பார்க் கியூன் ஹை மற்றும் அவரது தோழி சோய் சூன் ஆகியோர் ஊழல் மற்றும் நாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டதால் இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிபதி அதிபரை பதவிநீக்கம் செய்தார். அந்த நாட்டில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் அதிபரின் தோழி சோய் சூன் அவர்களின் மகள் சங் யோரா கடந்த சில ஆண்டுகளாக டென்மார்க்கில் வசித்து வந்த நிலையில், தென்கொரிய நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின்னர் நாட்டை விட்டு வெளியேறுமாறு சங் யோராவுக்கு உத்தரவிட்டுள்ளது. இன்னும் மூன்று நாட்களில் அவர் டென்மார்க்கைவிட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.