தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை மருத்துவமனையில் அனுமதி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை மருத்துவமனையில் அனுமதி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அக்கட்சியின் தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்தியுள்ள தேமுதிக, அக்கட்சியின் வேட்பாளருக்காக விஜயகாந்த் விரைவில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்ளும் வழக்கமான பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேமுதிக தலைமை அலுவலகம் செய்திக் குறிப்பு ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.

இந்த பரிசோதனைக்கு பின் ஓரிருநாளில் விஜயகாந்த் வீட்டுக்கு திரும்புவார் என்றும் அதனால் நிர்வாகிகளும் தொண்டர்களும் மருத்துவமனையில் விஜயகாந்தை சந்திக்க நேரில் வர வேண்டாம் என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply