பல்கலைகழக பட்டம் வாங்க ஆதார் கார்டு அவசியம். யூஜிசி உத்தரவு

பல்கலைகழக பட்டம் வாங்க ஆதார் கார்டு அவசியம். யூஜிசி உத்தரவு

இந்தியர்கள் அனைவருக்கும் ஆதார் என்பது அத்தியாவசியம் ஆனது என்ற நிலை கடந்த சில மாதங்களாக ஏற்பட்டது. வங்கி கணக்கு, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், உள்பட எந்த தேவைக்கும் ஆதார் கார்ட் கட்டாயம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. போகிற போக்கை பார்த்தால் சாலையில் நடந்து செல்ல வேண்டும் என்றால் கூட ஆதார் கார்டு தேவை என்ற நிலை ஏற்படாலும் ஆச்சரியம் இல்லை

இந்நிலையில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பட்டங்களுடன் ஆதார் எண் மற்றும் புகைப்படத்தை கட்டாயம் இணைக்கவேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவு ஒன்றை இன்று பிறப்பித்துள்ளது.

போலி பல்கலைக்கழக சான்றிதழை ஒழிக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் போது அந்த பட்டத்தில் ஆதார் எண் மற்றும் மாணவர்களின் புகைப்படத்தைக் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply