200 அகதிகள் கடலில் மூழ்கி பலி. இத்தாலிக்கு சென்றபோது நடந்த பரிதாபம்

200 அகதிகள் கடலில் மூழ்கி பலி. இத்தாலிக்கு சென்றபோது நடந்த பரிதாபம்

சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் உள்நாட்டு போர் நடந்து வருவதால் அவ்வப்போது நூற்றுக்கணக்கானோர் படகுகளில் இத்தாலி உள்பட பல்வேறு நாடுகளுக்கு படகுகளில் அகதியாக செல்கின்றனர். அவ்வாறு படகில் செல்லும்போது அதிகப்படியாக நபர்கள் பயணம் செய்வது மற்றும் கடல் சீற்றம் காரணமாக கடலில் படகு மூழ்கி உயிரிழப்பு நடைபெறுவது தொடர்கதையாக உள்ளது.

இந்நிலையில் 200க்கும் மேற்பட்ட அகதிகளுடன் மத்திய தரை கடல் வழியாக இத்தாலிக்கு ஒரு படகு சென்று கொண்டிருந்தது. அந்த படகு கடல்சீற்றம் காரணமாக கடலில் கவிழ்ந்து மூழ்கியதால், அந்த கடலில் பயணம் செய்த 200 அகதிகள் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதுவரை ஐந்து பிணங்கள் மட்டுமே கிடைத்துள்ளதாகவும், மற்றவர்களை தேடும் பணி நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டு மட்டும் 20 ஆயிரம் அகதிகள் புறப்பட்டு வந்ததாகவும் அவர்களில் 559 பேர் கடலில் மூழ்கி இறந்து விட்டதாகவும் சர்வதேச அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply