செந்தில் பிறந்த நாளில் வாழைப்பழ கேக். சூர்யா படக்குழுவினர் அசத்தல்
கவுண்டமணி-செந்தில் நகைச்சுவை ஜோடி ஹாலிவுட்டின் லாரல்-ஹார்டிக்கு இணையாக பேசப்பட்டவர்கள். இவர்கள் இருவரும் பல நூற்றுக்கணக்கான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து நீங்காப்புகழ் பெற்றவர்கள்
இந்நிலையில் செந்தில் தற்போது சூர்யா நடித்து வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறது. நேற்று செந்திலில் பிறந்தநாளை அடுத்து படக்குழுவினர் செந்திலில் வாழைப்பழ காமெடியை நினைவு கூறும் வண்ணம் வாழைப்பழ வடிவில் பிறந்த நாள் கேக்கை தயார் செய்து ஆச்சரியம் அடைய செய்தனர். இந்த ஏற்பாடுகளை பார்த்து செந்தில் ஆனந்தக்கண்ணீர் விட்டதாக படக்குழுவினர் தெரிவித்தனர்
இந்த பிறந்த நாள் நிகழ்ச்சியின்போது சூர்யா, கீர்த்தி சுரேஷ், இயக்குனர் விக்னேஷ் சிவன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.