தமிழகத்தில் 3 இடங்களில் நீட் தேர்வு: மத்திய அமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் 3 இடங்களில் நீட் தேர்வு: மத்திய அமைச்சர் அறிவிப்பு

தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டுமா? வேண்டாமா? என்று புறம் விவாதங்கள் நடந்து வரும் நிலையில் தமிழகத்தில் மேலும் 3 இடங்களில் நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். ஏற்கனவே சென்னை, மதுரை, கோவை திருச்சி ஆகிய இடங்களில் நீட் தேர்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது

மருத்துவப் படிப்புகளுக்கு ’நீட்’ எனப்படும் நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வை எழுதும் நடைமுறையை மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. நீட் தேர்வை கிட்டத்தட்ட அனனத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்ட நிலையில் தமிழகத்தில் மட்டும் இந்த தேர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கிராமப்புற மாணவர்கள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள் என்றும், அதன் காரணமாக நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் தொடர் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், வரும் மே மாதம் 7ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டது. இதில் இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 80 இடங்களில் நீட் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 80 இடங்களைத் தொடர்ந்து மேலும், 23 இடங்களிலும் நீட் தேர்வு நடக்கும் என்றும், அதில் தமிழகத்தில் மட்டும் வேலூர், நாமக்கல் மற்றும் திருநெல்வேலில் ஆகிய 3 இடங்களில் நடத்தப்படும் என்றும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply