ஐபிஎல் போட்டியில் சியர் லீடர்களுக்கு பதில் ராமர் பாடல்கள். மத்திய அமைச்சர் யோசனை

ஐபிஎல் போட்டியில் சியர் லீடர்களுக்கு பதில் ராமர் பாடல்கள். மத்திய அமைச்சர் யோசனை

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சியர் லீடர் மற்றும் சியர் கேர்ள் பிரபலம். பவுண்டரி அல்லது சிக்சர் அடிக்கும்போதும், விக்கெட் விழும்போதும் அந்தந்த அணிகளை சேர்ந்த சியர் கேர்ள்ஸ் கவர்ச்சி உடையில் ஆட்டம் ஆடுவர். பின்னணியில் ஒரு பாடல் ஒலிக்கும்

இந்த நிலையில்  மத்தியப் பிரதேச மாநில தலைநகர் இந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், ‘ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு பொழுதுபோக்கு வரியில் இருந்து விலக்களிக்கப் போவதில்லை என்று முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளதை சுட்டிக் காட்டினார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு பொழுதுபோக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்காமல் இருப்பதற்கு அப்படி என்ன பிரச்னை இருந்துவிட முடியும்? என கூறினார்.

ஐபில் கிரிக்கெட் போட்டிகளில் சியர் லீடர்கள் தேவையில்லை என்று சவுகான் கருத்து கூறியிருப்பதால், வீரர்கள் மைதானத்தில் சிக்சரோ, பவுண்டரியோ அடிக்கும்போது, சியர்லீடர்களுக்கு பதிலாக ராமரின் பாடல்களை இசைக்கலாம் என்றும் திக் விஜய் சிங் ஆலோசனை கூறியுள்ளார்.

Leave a Reply