தமிழக அரசியல்வாதிகளின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது. ரஜினி இலங்கை பயணம் ரத்து குறித்து ராஜபக்சே மகன்
ரஜினியின் இலங்கை பயண ரத்துக்கு லைகா நிறுவனம் தமிழக அரசியல்வாதிகள் மீது குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகனும் தமிழக அரசியல்வாதிகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முன்னாள் அதிபர் ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே தனது டுவிட்டரில் கூறியபோது, ‘தமிழக அரசியல்வாதிகளின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்களுக்கு உதவ தமிழக அரசியல் கட்சியினர் யாரையும் அனுமதிக்கமாட்டார்கள். நடிகர் ரஜினியாக இருந்தாலும் உதவ அனுமதிக்கமாட்டார்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.
ஏற்கனவே ராஜபக்சேவின் ஆதரவாளர் சுபாஷ்கரன் என்று தமிழக அரசியல்வாதிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் தற்போது லைகா நிறுவனத்திற்கு ஆதரவாக நமல் ராஜபக்சே பேசியது இதை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.