உங்கள் வீட்டில் கொசு இருக்குதா? அப்படின்னா ரூ.1000 அபராதம். சந்திரபாபு நாயுடு அதிரடி
வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புற சூழல் வைத்திருக்கும் நபர்களுக்கு ரூ.1000 அபராதம், சிறை உள்பட பல்வேறு தண்டனை வழங்க ஆந்திர மாநில சந்திரபாபு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றதில் இருந்து நதிநீர் இணைப்பு, புதிய தலைநகரம் என ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் நடந்து வருவதால் அம்மாநில மக்கள் பெரும்பயன் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் மாநிலத்தின் பல பகுதிகளில் கொசுத்தொல்லை இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு நோய்களுக்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து அரசின் கவனத்திற்கு வந்தவுடன் முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
இதன்படி வீடுகள், உணவகங்கள், கடைகள், நெடுஞ்சாலைகள், தள்ளுவண்டி என எந்த பகுதியில் கொசு உற்பத்தியாகும் படியான கழிவுநீர், குப்பைக்கூளங்கள் உள்ளிட்டவற்றை தேங்கும் படியாக வைத்தால், அவர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்க அரசு முடிவு செய்துள்ளதாம். இதுகுறித்த சட்ட மசோதா ஒன்றுக்கு சந்திரபாபுவின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது விரைவில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்து சட்டமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.