‘விவேகம்’, ‘விஜய் 61’ படங்கள் குறித்து காஜல் அகர்வால்
தமிழ் திரையுலகின் இரண்டு பெரிய நடிகர்களான அஜித் மற்றும் விஜய்யுடன் ஒரே நேரத்தில் ஜோடியாக நடித்து வருபவர் காஜல் அகர்வால். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அஜித்தின் ‘விவேகம்’ படம் குறித்தும், விஜய்யின் ‘விஜய் 61’ படம் குறித்தும் காஜல் அகர்வால் மனம் திறந்து கூறியுள்ளார்
அஜித்தின் ‘விவேகம்’ படத்தில் நான் ஒரு தமிழ்ப்பெண்ணாக நடித்து வருகிறேன். அஜித்தின் மனைவியாக நடித்து வரும் எனது கேரக்டர் கணவன் – மனைவி உறவின் பெருமையை போற்றும் வண்ணம் இந்த படத்தில் அமைந்துள்ளது. இயக்குனர் சிவா எனக்கு இந்த படத்தில் குடும்பப்பாங்கான கேரக்டர் கொடுத்ததற்கு நன்றி கூறிக்கொள்கிறேன். ‘விவேகம்’ குழுவினர்களுடன் பணிபுரிவதில் பெருமை அடைகிறேன். மிக விரைவில் பல்கேரியா சென்று படக்குழுவினர்களுடன் இணையவுள்ளேன்’ என்று கூறியுள்ளார்.
மேலும் ‘விஜய் 61’ படம் குறித்து காஜல் கூறியபோது, ‘இயக்குனர் அட்லி தனது படங்களில் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைப்பவர் என்பது அவரது முந்தைய படங்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம். அதேபோல் ‘விஜய் 61′ படத்திலும் என்னுடைய கேரக்டரை மிகவும் கூர்மையாக செதுக்கியுள்ளார். நீங்கள் ஒரு வித்தியாசமான காஜலை இந்த படத்தில் பார்ப்பீர்கள். துப்பாக்கி, ஜில்லா படங்களுக்கு பின்னர் விஜய்யுடன் இணைந்து நடிப்பதில் எனக்கு மிகுந்த சந்தோஷம்’ என்று கூறியுள்ளார்.