பாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2017: 255 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
இந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன், சிறப்பாக இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 255 ஆபீசர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பத்தை இன்று மார்ச்.24 முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி கடைசி நாளாகும்.
தகுதி, அனுபவம் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அடுத்த கட்டமாக ஓரிரு கட்ட நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெறுவதர்கான மதிப்பெண்களை பாரத் ஸ்டேட் வாங்கியே நிர்ணயிக்கும். விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் இறங்கு தரவரிசை தயார் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.statebankofindia.com , www.sbi.co.in சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும், விண்ணப்பக் கட்டணத்தை கிரெடிட், டெபிட் மற்றும் நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.
அந்தந்த பணிக்கு ஏற்ற வகையில் கல்வித் தகுதி, அனுபவம், வயது உள்ளிட்ட மற்ற விவரங்கள் மாறுபடும். ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பணிக்கு விண்ணப்பிக்கலாம். தற்காலிக பணி என்றாலும் உரிய ஆவணங்கள் சரிப்பார்க்கப்பட்ட பிறகு தேர்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்த அடிப்படையிலான பணி என்பதனால் 3 மாதங்களுக்கு ஒருமுறை சென்னை, அகமதாபாத், பெங்களூர், போபால், தில்லி, ஹைதராபாத், கொச்சி, மும்பை, புனே, திருவனந்தபுரம், கொல்கத்தா, சண்டிகர் மற்றும் இந்தோர் போன்ற பகுதிகளுக்கு மாற்றப்படுவார்கள்.
இது குறித்த கூடுதல் தகவலுக்கு பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை http://www.sbi.co.in/careers அணுகவும்.