தமிழக விவசாயிகள் போராட வேண்டியது டெல்லியிலா? தமிழகத்திலா? பொன்.ராதாகிருஷ்னனுக்கு சில கேள்விகள்
தமிழக விவசாயிகள் கடந்த இரண்டு வாரங்களாக டெல்லியில் பல்வேறு கோரிக்கைகலை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் நிலையில் விவசாயிகள் போராட வேண்டியது டெல்லியில் இல்லை தமிழகத்தில் என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விவசாயிகள் போராட்டம் குறித்து மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதில் கூறிய பொன் ராதா கிருஷ்ணன் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, ‘காரிஃப் பயிர் நிலைமை குறித்து நவம்பர் மாதம் தமிழக அரசு அறிக்கை மத்திய அரசிற்கு தந்திருக்க வேண்டும். இந்த அறிக்கை இன்னும் மத்திய அரசுக்கு வந்து சேரவில்லை. ஏன் என்று தமிழக அரசை போராட்டக்காரர்கள் கேள்வி கேட்டதுண்டா? அப்படியெனில் இவர்கள் போராட வேண்டியது தமிழகத்திலா? இல்லை டெல்லியிலா? இங்கு போராடுவோர் இனியேனும் உண்மையை உணர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் பொன்ராதாகிருஷ்ணனின் இந்த கருத்துக்கு சமூக வலைத்தல பயனாளிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். அந்த கேள்விகளை தொகுத்து இங்கு அளித்துள்ளோம். இந்த கேள்விகளுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதில் சொல்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இதோ அந்த கேள்விகள்
1. கர்நாடகாவிற்கு கேட்டதும் வறட்சி நிவாரணம் கிடைத்து விட்டது! ஏன் அங்கு பாஜக ஆட்சி என்பதா?
2. முந்தா நாள் ஆட்சிக்கு வந்த உ.பி மாநிலத்தில் அனைத்து விவசாய கடனும் தள்ளுபடி, அதுவும் மத்திய அரசு நிதி உதவியுடன்! ஆனால் தமிழக விவசாயிகளுக்கு மட்டும் ஏன் பாரபட்சம்?
3. வர்தா புயல் நிவாரண தொகை இன்னும் ஏன் வரவில்லை?
4. வறட்சி நிவாரணத்துக்கு கேட்ட ஆதாரங்களை கொடுத்தும் எந்த பதிலும் இல்லாதது ஏன்?
5. 140 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை அதிகார பூர்வமாக அறிவித்தும் கேட்ட நிதியில் 100 ரூபாய்க்கு 3 ரூபாய் என்ற பங்கில் நிதியை மத்தியஅரசு கொடுத்துள்ளது ஏன்?
6 .உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் இன்னும் அமைக்கப் படவில்லை! ஏன்?