முக்குலத்தோர் புலிப்படையில் இருந்து கருணாஸ் நீக்கம்
முக்குலத்தோர் புலிப்படையில் இருந்து கருணாஸ் சற்று முன்னர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் முக்குலத்தோர் புலிப்படையின் நிர்வாகிகளை கருணாஸ் நீக்கிய நிலையில் அதற்கு பதிலடியாக இந்த அமைப்பின் பொதுச்செயலாளர் பாண்டித்துரை மற்றும் துணைத்தலைவர் சந்தனகுமார் கூட்டாக இந்த அதிரடி அறிவிப்பை மதுரையில் சற்று முன்னர் அறிவித்துள்ளனர்.
மேலும் முக்குலத்தோர் புலிப்படையின் புதிய தலைவராக சந்தனகுமாரை நியமித்து செயற்குழுவில் தீர்மானமும் இயற்றப்பட்டுள்ளது.
முக்குலத்தோர் புலிப்படையின் தலைவராக இருந்த கருணாஸ், கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அவர் சசிகலா அணியை ஆதரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.