ஆப்பிள் ஐஓஎஸ் அப்டேட் வெளியீடு: புதிய அப்டேட்டில் கிடைக்கும் வசதிகள்
ஐபோன், மேக், ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் டிவி உள்ளிட்ட சாதனங்களுக்கான ஐஓஎஸ் அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட்கள் ஆப்பிள் சாதனங்களில் முறையே ஐஓஎஸ் 10.3, மேக் ஒஎஸ் 10.12.4, வாட்ச் ஒஎஸ் 3.2 மற்றும் டிவி ஒஎஸ் 10.2 என அழைக்கப்படுகின்றன. புதிய இயங்குதளத்திற்கான ஓடிஏ அப்டேட்களை வாடிக்கையாளர்கள் தங்களது சாதனங்களில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
ஐஓஎஸ் 10.3 அப்டேட்டில் பைண்ட் மை ஏர்பாட்ஸ் என்ற வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பைண்ட் மை ஐபோன் செயலியை கொண்டு ஏர்பாட்ஸ்-ஐ கண்டறிய முடியும். இந்த வசதியானது ஐபோனுடன் இணைக்கப்பட்ட நிலையில் ஏர்பாட்ஸ் எங்கு உள்ளது என்பதை நிஜ நேரத்தில் டிராக் செய்ய முடியும்.
ஒருவேளை ஐபோனுடன் இணைக்கப்படவில்லை எனில் ஏர்பாட்ஸ் இறுதியாக எங்கு இருந்தது என்பதை டிராக் செய்ய முடியும். ஏர்பாட்ஸ்-இல் அலாரம் வைத்து அவை எங்கிருக்கிறது என்பதை டிராக் செய்யலாம். இதே போன்று பல்வேறு ஐஓஎஸ் சாதனங்களிலும் புதிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
புதிய வசதிகள் வழங்கப்பட்டுள்ள ஓஎஸ் இயங்குதளத்தை சாஃப்ட்வேர் அப்டேட் (Software Update) பகுதியில் சென்று டவுன்லோடு செய்து கொள்ள முடியும். இத்துடன் புதிய இயங்குதள அப்டேட் டவுன்லோடு செய்யும் முன் உங்களது தரவுகளை ஐகிளவுடில் பேக்கப் செய்து கொள்ள வேண்டியவது அவசியம் ஆகும்.