வகைவகையா வடாம், வற்றல், ஊறுகாய்: நெல்லி ஊறுகாய்

வகைவகையா வடாம், வற்றல், ஊறுகாய்: நெல்லி ஊறுகாய்

என்னென்ன தேவை?

அருநெல்லிக்காய் – 2 கப்

கடுகு, சீரகம் – தலா 1 டீஸ்பூன்

பெருங்காயம் – அரை டீஸ்பூன்

மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் – தலா 1 டீஸ்பூன்

வெந்தயம் – 1 டீஸ்பூன்

நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

நெல்லிக்காயைக் கழுவி, இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேகவையுங்கள். வெந்த பிறகு எடுத்து ஆறவைத்துக் கொட்டையை நீக்குங்கள். வெறும் வாணலியில் கடுகு, வெந்தயம், சீரகம் ஆகியவற்றை வறுத்துப் பொடித்துக்கொள்ளுங்கள்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் மீதமுள்ள கடுகைப் போட்டுத் தாளியுங்கள். அதில் வெந்த நெல்லிக்காய், பெருங்காயத் தூள், மஞ்சள் தூள், வறுத்துப் பொடித்த பொடி, மிளகாய்த் தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி மீதமுள்ள எண்ணெய் ஊற்றிக் கிளறுங்கள். அடுப்பைக் குறைந்த தணலில் வையுங்கள். நெல்லிக்காய், மசாலாப் பொருட்களுடன் நன்றாகக் கலந்த பிறகு இறக்கிவையுங்கள். இந்த நெல்லிக்காய் ஊறுகாய் 15 நாட்கள் வரை கெடாது

Leave a Reply