பட்டப்படிப்பு சான்றிதழ் வேண்டும் என்றால் நீச்சல் தெரிய வேண்டும். சீன பல்கலைக்கழகம் புதிய நிபந்தனை

பட்டப்படிப்பு சான்றிதழ் வேண்டும் என்றால் நீச்சல் தெரிய வேண்டும். சீன பல்கலைக்கழகம் புதிய நிபந்தனை

கல்லூரியில் படித்து பட்டம் பெற வேண்டுமானால் அந்தந்த படிப்பில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்றுதான் அனைத்து கல்லூரிகளிலும் இருக்கும் ஒரு வழக்கம். ஆனால் சீனாவில் ஒரு பல்கலைகழகத்தில் நீச்சல் தெரிந்தால்தான் பட்டப்படிப்பின் சான்றிதழ் கிடைக்கும் என்ற நிபந்தனை போடப்பட்டுள்ளதாம்

சீனாவின் மிகவும் சிறப்பு வாய்ந்த பல்கலைகழகங்களில் ஒன்று டிசிங்குவா பல்கலைகழகம். இந்த பல்கலையின் தலைவரான கியூ யாங் என்பவர், தங்கள் பல்கலையில் சேரும் மாணவர்களுக்கு உடல் தரத்தை மேம்படுத்துவதற்கு உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது என்றும் அனைத்து மாணவர்களுக்கும் உடற்பயிற்சி கட்டாயம் என்றும் கூறியதோடு, நீச்சல் பழகவில்லை என்றால் பட்டப்படிப்பு சான்றிதழ் கிடையாது என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே சீனாவில் 1919-ஆம் ஆண்டு நீச்சல் தெரிந்தவர்களுக்கு மட்டுமே பட்டம் அளிக்கப்படும் என புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் ஒருசில காரணங்களல் இந்த பழக்கம் கைவிடப்பட்டது.

தற்போது மீண்டும் இந்த ஆண்டு செப்டம்பரில் புதிதாக பல்கலைகழகத்தில் சேர வரும் மாணவர்கள் நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டும். குறைந்தது 50 மீட்டராவது நீச்சலடிக்க வேண்டும். இல்லையெனில் கல்லூரிப் படிப்பு முடிவதற்குள், நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply