ஜீரண சக்தியை அதிகரிக்கும் அன்னாசி பழ ரைத்தா
அன்னாசி பழத்துண்டுகள் – 1 கப்
அன்னாசி பழச்சாறு – 1 கப்
தயிர் – 1 கப்
சீரகப்பொடி – 1 டீஸ்பூன்
தேன் – 1 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கு
கொத்தமல்லி இலை – 1 டீஸ்பூன் ( நறுக்கியது)
செய்முறை :
* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* முதல் அடுப்பில் ஒரு கடாயை வைத்து கெட்டியான அன்னாசி சாறு, தேன் ஊற்றி நன்கு கிளறி விடவும்.
* அடுத்து அதில் நறுக்கிய அன்னாச்சிப் பழத்துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி விட்டு அன்னாசி தயாரானதும் தனியாக எடுத்துக் கொள்ளவும்.
* தயிரில் வதக்கிய அன்னாசியை இட்டு, சீரகப் பொடி, நறுக்கிய கொத்தமல்லி இலை, உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
* அதனை அழகுப்படுத்த மேலாக அன்னாசி துண்டுகளை வைத்து பரிமாறலாம்.
* அன்னாசி பழ ரைத்தா ரெடி!
* இதை சாலட் போலவும் சாப்பிடலாம்.