உத்தரபிரதேசத்தில் தடம் புரண்ட ரயில். 22 பயணிகள் படுகாயம்
உத்தரபிரதேச மாநிலத்தில் ஜபல்புர் நிசாமுதின் மககோசல் எக்ஸ்பிரஸ் என்ற ரயில் தடம் புரண்டதில் 22 பயணிகள் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த பயணிகளை உடனே மீட்புப்படையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உத்தரபிரதேச மாநிலத்தின் மொகாபா ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை 2 மணி அளவில் திடீரென ஜபல்புர் நிசாமுதின் மககோசல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. மகோபா, குல்பாபா ரயில் நிலையங்களுக்கிடையே இந்த ஸ் ரயில் பயணித்துக்கொண்டிருந்தபோது ரயில் தடம் புரண்டதாகவும், இந்த விபத்து காரனமாக ரயிலில் இருந்த 8 பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து விலகியதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
4 குளிர் சாதன பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி மற்றும், இரண்டு முன் பதிவு இல்லாத பெட்டிகள், ஒரு சரக்குப்பெட்டி என மொத்தம் 8 பெட்டிகள் தடம் புரண்டன.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் வடக்கு மத்திய ரயில்வே உயர் அதிகாரிகள் அங்கு விரைந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். தடம் புரண்ட பெட்டிகளில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பயணிகளை மீட்புக் குழுவினர் உடனடியாக மீட்ட மகோபா மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.