சுப்ரீம் கோர்ட் அதிரடி எதிரொலி: பி.எஸ் 3 வாகனங்களுக்கு ரூ. 22,000 வரை தள்ளுபடி!

சுப்ரீம் கோர்ட் அதிரடி எதிரொலி: பி.எஸ் 3 வாகனங்களுக்கு ரூ. 22,000 வரை தள்ளுபடி!

நாட்டின் சுற்றுச்சூழல் மாசுப்பாட்டைக் குறைக்கும் வகையில், பிஎஸ்.3 ரக இன்ஜின் பொருத்திய வாகன விற்பனைக்கு, நாளை முதல் அதாவது ஏப்ரல் 1-ம் தேதி முதல் சுப்ரீம்கோர்ட் தடை விதித்துள்ளது. இதையடுத்து, ஏப்ரல் 1-ம் தேதி முதல் அந்த வாகனங்களை விற்பனை மற்றும் பதிவுசெய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட பிஎஸ்.3 இரு சக்கர வாகனங்களை இன்றுக்குள் விற்கவேண்டிய கட்டாயம், இரு சக்கர வாகன நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களான ஹீரோ ஹோண்டா, பஜாஜ், சுசுகி போன்ற நிறுவனங்கள், வானங்களை விற்க போட்டி போட்டுக்கொண்டு தள்ளுபடி வழங்கிவருகின்றன. குறிப்பாக காலை ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை அதன் விலையில் இருந்து தள்ளுபடிசெய்யப்பட்டுவந்தன. மேலும் இன்று பஜாஜ், ஹீரோ போன்ற நிறுவனங்கள் ஒரு வாகனத்துக்கு ரூ.22,000 வரை தள்ளுபடி செய்து விற்பனை செய்து வருகின்றன.

வாகனங்களை விற்க, நிறுவனங்கள் கூடுதல் அவகாசம் வழங்க உற்பத்தியாளர்களின் வேண்டுகோளை சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டதால் இன்று தள்ளுபடி செய்யப்பட்ட வாகனங்களின் விற்பனை அமோகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply