லதா நடித்த படத்தின் டீசரை வெளியிட்ட ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லதா இணைந்து நடித்த ‘ஆயிரம் ஜென்மங்கள்’ திரைப்படம் வெளியாகி சுமார் 40 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்போது லதா நடித்த படம் ஒன்றின் டிசரை ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்
ஆரி, ஆஷ்னா ஜாவேரி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நாகேஷ் திரையரங்கம். இந்த படத்தில் மிக முக்கிய கேரக்டரில் எம்ஜி.ஆர், சிவாஜியுடன் கடந்த 70களில் புகழ்பெற்று விளங்கிய லதா நடித்துள்ளார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டீசரை நேற்று ரஜினிகாந்த் தனது போயஸ் கார்டன் வீட்டில் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் நடிகை லதா உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
ஆரி, ஆஷ்னா ஜாவேரி, லதா, சித்தாரா, மனோபாலா, காளி வெங்கட், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை இஷாக் இயக்கியுள்ளார். ஸ்ரீ இசையமைத்துள்ள இந்த படம் வரும் ஜூன் மாதம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.