அமெரிக்காவில் பயங்கர தீவிபத்து. சுக்குநூறாக நொறுங்கிய தேசிய நெடுஞ்சாலை பாலம்
அமெரிக்காவில் அட்லாண்டா மாநிலத்தையும் இதர மாநிலங்களையும் இணைக்கும் முக்கிய பாலமாக கருதப்படுவது 85-ம் எண் நெடுஞ்சாலையில் உள்ள பிரதான பாலம். இந்த பாலத்தின் அடியில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பாலம் முழுமையாக சேதம் அடைந்தது.
தீயின் வெப்பம் அதிகமாக அதிகமாக வெப்பத்தால் சேதமடைந்த பாலத்தின் ஒரு பகுதி சுக்குநூறாகநொறுங்கி விழுந்தது. இதனால் இந்த பாலத்தின் வழியாக பிற மாநிலங்களுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நெடுந்தூரம் சுற்றிகொண்டு வேறு பாதையில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
மேலும் பாலத்தின் அருகே வசித்து வந்தவர்கள் தங்களது வீடுகளுக்கு செல்ல முடியாமல் பெரும் பரிதவிப்புக்கு உள்ளாகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.