இது ஜனநாயக நாடா? சர்வாதிகார நாடா? தமிழக போலீசுக்கு முன்னாள் நீதிபதி கட்ஜூ காட்டமான கேள்வி

இது ஜனநாயக நாடா? சர்வாதிகார நாடா? தமிழக போலீசுக்கு முன்னாள் நீதிபதி கட்ஜூ காட்டமான கேள்வி

தமிழக விவசாயிகள் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேல் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அமைதியாக ஒரு கூட்டம் நடத்த விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் அனுமதி பெற்றிருந்தனர். ஆனால் இந்த அனுமதியை கடைசி நேரத்தில் தமிழக போலீசார் ரத்து செய்துள்ளனர். இதற்கு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கண்டித்துள்ளார். அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

இந்திய அரசியலமைப்புச் சட்டம் விதி 19(1)(b) யின் படி அனைத்து இந்தியக் குடிமக்களுக்கும் அமைதியாக கூட்டம் கூடுவதற்கு உரிமை வழங்கப் பட்டிருக்கிறது.
அமைதி வழியில் அனுமதிக்கப் பட்ட இடத்தில் விவசாயிகளுக்காக இளைஞர்கள் கூட்டம் நடத்துவதை, தடுத்து நிறுத்திய காவல்துறையின் நடவடிக்கை கண்டிக்கத் தக்கது.அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது . இளைஞர்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் விதி 19(1)(b) யின் படி இளைஞர்களுக்கு உள்ள உரிமைகளை தமிழக காவல்துறை எப்படி தடுத்து நிறுத்தலாம் என்று எனக்கு புரியவில்லை.

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. சர்வாதிகார நாடு அல்ல. குடிமக்களின் அடிப்படை உரிமைகள், அரசியலமைப்புச் சட்டம் பகுதி 3 ல் உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்திய குடிமக்களாகிய இந்த இளைஞர்களின் அடிப்படை உரிமைகளை தமிழக காவல்துறை பறித்துள்ளதாக அறிகிறேன். இது சட்டத்திற்கு புறம்பானது,

தமிழக இளஞர்களின் உரிமைகளை பறிக்கும் இத்தகைய நடவடிக்கைகளை தமிழகக் காவல் துறை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறேன். மீறினால் சட்டபூர்வமான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்”

இவ்வாறு மார்க்கண்டேய கட்ஜு பதிவிட்டுள்ளார்.

Leave a Reply