சத்து நிறைந்த கேழ்வரகு – கீரை ஊத்தப்பம்
தேவையான பொருட்கள் :
இட்லி மாவு – 1 கப்
முழு ராகி – 1 கப்
கீரை – 1 கப்
வெங்காயம் – 1
ப.மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவைக்கு
சீரகம் – 1 ஸ்பூன்
செய்முறை :
* சிறுகீரை, முளை கீரை, வெந்தயகீரை, முருங்கைகீரை என எந்த கீரை வேண்டுமானதும் சேர்த்து கொள்ளலாம். விருப்பப்பட்ட கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* முழு கேழ்வரகை 2 மணி நேரம் ஊற வைத்து கழுவி, கல் நீக்கி மிக்ஸியில் நன்றாக அரைத்து புளித்த இட்லி மாவுடன் உப்பும் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
* கடாயை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம், ப.மிளகாயை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் கீரை, உப்பு போட்டு 3 நிமிடம் வதக்கி ஆற விடவும்.
* வதங்கிய கீரையை மாவில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை சற்று தடியாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
* சத்து நிறைந்த கேழ்வரகு கீரை ஊத்தப்பம் ரெடி.