மகள் பிணத்தை சூட்கேசில் போட்டு கடலில் தூக்கி எறிந்த தாய்
பசியின்மை நோய் காரணமாக மரணம் அடைந்த முன்னாள் அழகி ஒருஅரின் பிணத்தை சூட்கேசில் போட்டு, அவரது தாயாரா கடலில் தூக்கி எறிந்துள்ள சம்பவம் இத்தாலி தலைநகர் ரோம் நகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலி நாட்டின் ரோம் நகரில் வசித்து வந்தவர் கேதரினா லக்டி. முன்னாள் மாடலாக திகழ்ந்த அவர், பசியின்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் நீண்ட நாட்களாக உணவு உண்ணாமல் இருந்த அவர், உடல்நலம் குன்றி உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய், செய்வதறியாது தவித்துள்ளார். தனது மகளின் உடலுடன் நீண்ட நாட்கள் தனி அறையில் வசித்துள்ளார். பின்னர் ஒரு சூட்கேஸில் மகளின் உடலைப் போட்டு, அதனை கடலில் வீசியுள்ளார். பின்னர் அவர் தனது சொந்த நாடான ரஷ்யாவிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு அவரது நண்பர்களிடம் யார் கேட்டாலும், தான் ரஷ்யாவில் நீண்ட நாட்களாக இருந்ததாக பொய் கூறுமாறு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மாடல் அழகியின் உடலை, ரிமினி நகரின் கடற்பகுதியில் மீனவர்கள் கண்டெடுத்துள்ளனர். அதனை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கேதரினாவின் வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கேதரினாவின் தாயார் குறித்து விசாரித்தனர். அதில் முன்னுக்கு பின் முரணான தகவல்கள் கிடைக்கவே, தாயாரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் மாடல் அழகி உயிரிந்த உண்மை நிலவரம் தெரியவந்ததை அடுத்து, வழக்கு முடித்து வைக்கப்பட்டது.