சூர்யா கேரக்டரில் நடிக்கும் ஆர்.கே.சுரேஷ்
பிரபல இயக்குனர் பாலா இயக்கிய ‘தாரை தப்பட்டை’ உள்பட பல படங்களில் வில்லன் வேடத்தில் நடித்த பிரபல தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், தற்போது ஹீரோவாக புரமோஷன் ஆகி நான்கு படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ‘மன்னாரு’ பட இயக்குனர் ஜெய்சங்கர் இயக்கவுள்ள அடுத்த படத்தில் ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக முன்னணி நடிகைஒ ஒருவர் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் ஆர்.கே.சுரேஷ், ‘நந்தா’ படத்தில் சூர்யா நடித்தது மாதிரியான கேர்கடர் என்றும் இந்த கேரக்டருக்கு மிகப்பொருத்தமாக ஆர்.கே.சுரேஷ் பொருந்தியுள்ளதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு ‘வேட்டை நாய்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்
இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.