தங்கம், வெள்ளி போல் தினசரி விலையாகிறது பெட்ரோல்-டீசல்
தங்கம், வெள்ளி போலவே வெகுவிரைவில் பெட்ரோல் டீசல் விலையில் தினசரி விலையாக மாற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
தற்போது தங்கம், மற்றும் வெள்ளியின் விலை சர்வதேச மார்க்கெட் நிலவரத்திற்கு ஏற்ப தினசரி நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறடு. அதேபோல் கச்சா எண்ணெயின் சர்வதேச மார்க்கெட்டிற்கு ஏற்ப தினசரி விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக மத்திய அரசை வலியுறுத்தி வந்தன
இந்த நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களிடம் நேற்று இதுகுறித்து பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி விலையாகும்து அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தினசரி விலை நடைமுறை அமலுக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை தினமும் சில பைசாக்கள் குறையும் அல்லது ஏறும். பெரிய மாற்றங்கள் இருக்காது. இதனால் வாடிக்கையாளர்களும் அதிர்ச்சியடைய மாட்டார்கள், என்றும் அதே சமயத்தில் இந்த நடைமுறையை எளிதாக அமல்படுத்த தற்போதைய டிஜிட்டல் தொழில்நுட்பம் உதவும் என்றும், விலை மாறுதல்களை தினமும் சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களுக்கு தெரிவிக்கலாம் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் கூறி வருகின்றன.