சீன அதிபருக்கு டொனால்ட் டிரம்ப் விருந்து. சீனா செல்லவும் சம்மதம்

சீன அதிபருக்கு டொனால்ட் டிரம்ப் விருந்து. சீனா செல்லவும் சம்மதம்

அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையே அதிகாரவர்க்க கருத்துவேறுபாடுகள் அதிகரித்து வரும் நிலையில், இருநாடுகளும் நட்புணர்வுடன் செயல்பட முடிவெடுத்தது. இதன் ஒரு பகுதியாக அமெரிக்கா சென்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்தார் சீன அதிபர் ஸி ஜின்பிங். இந்த சந்திப்பில் இருநாட்டு தொழில், மற்றும் நட்புணர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

பின்னர் சீனா அதிபர் ஸி ஜின்பிங் மற்றும் அவருடைய மனைவி ஆகிய இருவருக்கும் புளோடோரியாவில் உள்ள தனது மாரா-லாகோ உல்லாச விடுதியில் அதிபர் டிரம்ப் அறுசுவை விருந்தளித்தார். விருந்து முடிந்த பின்னர் சீனாவுக்கு வருகை தருமாறு அதிபர் டிரம்புக்கு அதிபர் ஸி ஜின்பிங் அழைப்பு விடுத்தார். அதை டொனால்டு டிரம்ப் ஏற்றுக்கொண்டார். எனவே அவர் இந்த ஆண்டில் சீனா செல்கிறார்.

இத்தகவலை அமெரிக்கா வெளியுறவுதுறை மந்திரி ரெஸ் டில்லர்சன் தெரிவித்தார். இருநாட்டு தலைவர்களுக்கும் இடையேயான பேச்சு நல்லமுறையில் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் விதமாக அமைந்து இருந்தது என்றார்.

Leave a Reply