காற்று வெளியிடை’ ‘8 தோட்டாக்கள்’ ஓப்பனிங் வசூல் நிலவரம்

காற்று வெளியிடை’ ‘8தோட்டாக்கள்’ ஓப்பனிங் வசூல் நிலவரம்

கடந்த வாரம் வெள்ளியன்று வெளியான மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ மற்றும் அறிமுக இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கிய ‘8 தோட்டாக்கள்’ ஆகிய திரைப்படங்களின் ஓப்பனிங் வார இறுதி வசூல் குறித்து பார்ப்போம்

காற்று வெளியிடை’ திரிப்படம் கடந்த வார இறுதியில் சென்னையில் 20 திரையரங்க வளாகங்களில் 368 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.1,54,53,650 வசூல் செய்துள்ளது. மாஸ் நடிகர்களின் படங்களுக்கு இணையாக முதல்வார வசூல் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த படத்திற்கு நெகட்டிவ் ரிசல்ட் கிடைத்துள்ளதால் இனிவரும் நாட்களில் கிடைக்கும் வசூலை பொறுத்தே இந்த படம் வெற்றி படமா? அல்லது தோல்வி படமா? என்பதை உறுதி செய்ய முடியும்

அதேபோல் கடந்த வெள்ளியன்று வெளியான இன்னொரு திரைப்படமான ‘8 தோட்டாக்கள்’ திரைப்படம் 10 திரையரங்க வளாகங்களில் 37 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.6,14,840 வசூல் செய்துள்ளது. மாஸ் நடிகர்கள், பெரிய இயக்குனர் இன்றி கதைக்காகவே இந்த படம் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply