ஆர்.கே.நகர் போல் அனந்த்நாக் தொகுதி தேர்தலும் ரத்து
அளவுக்குஅதிகமாக பணப்பட்டுவாடா செய்யப்பட்டதன் காரணமாக ஆர்கே நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில், அளவுக்கு அதிகமான வன்முறை காரணமாக ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மக்களவை தொகுதியில் நடைபெறவிருந்த இடைத்தேர்தலை ஒத்திவைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் காலியாக இருந்த மக்களவை தொகுதியான, அனந்த்நாக் மக்களவை தொகுதிக்கு வருகிற 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அனந்த்நாக் தொகுதியில் நடைபெறவிருந்த இடைத்தேர்தலை வருகிற மே மாதம் 25-ம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்துள்ளது. கட்ந்த சில நாட்களாக அந்த பகுதியில் பயங்க்ர வன்முறை நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக பள்ளிகள் எரிக்கப்பட்டு கலவரம் மூண்டதால், தேர்தல் நடத்தக் கூடிய சூழல் இல்லை என்பதை உணர்ந்த தேர்தல் ஆணையம், இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அறிவித்துள்ளது.
அதேபோல் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் மற்றொரு தொகுதியான ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியில் நேற்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது ஆனால் வாக்குப்பதிவு தொடங்கியது முதலே போராட்டக்காரர்கள் ஆங்காங்கே கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த தொகுதியில் கலவரம் காரணமாக வெறும் 6.5 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியது என்பது குறிப்பிடத்தக்கது.