நடிகர் கலாபவன் மணி மர்ம மரணம்: சிபிஐ விசாரணைக்கு கேரள ஐகோர்ட் உத்தரவு

நடிகர் கலாபவன் மணி மர்ம மரணம்: சிபிஐ விசாரணைக்கு கேரள ஐகோர்ட் உத்தரவு

பிரபல தமிழ், மற்றும் மலயாள நடிகர் கலாபவன் மணி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மர்மமான முறையில் மரணம் அடைந்த நிலையில் இந்த மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் 6ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கலாபவன் மணி உயிரிழந்தார். உடல்நலக் குறைவு காரனமாக அவர் இறந்ததாக கூறப்பட்டது. ஆனால் அவரது மரணம் குறித்து சந்தேகம் எழுந்ததால் மணியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில், கலாபவன் மணி மது அருந்தியதாகவும், அவரது உடலில் மெத்தில் ஆல்கஹால் அதிகளவில் இருந்ததால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து கலாபவன் மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன் இதுகுறித்து காவல்துறையினர்களிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கலாபவன் மணிக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டது உண்மை எனிலும், இறப்பதற்கு முன் அவரது கெஸ்ட் ஹவுசில் நடந்த மது பார்ட்டியில் மணி அளவுக்கு அதிகமாக குடித்ததாகவும், அவர் குடித்த மதுவில் அதிகளவு ரசாயனம் கலந்திருந்ததகாவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே கெஸ்ட் ஹவுசில் அப்படி ஒரு பார்டி நடந்ததற்கான தடையங்கள் முற்றிலுமாக அளிக்கப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

அதனடிப்படையில், கலாபவன் மணி மது அருந்தும்போது, அவருடன் இருந்த வேலையாட்கள் விபின், முருகன், அருண் மற்றும் நடிகர்கள் ஜாபர், ஷாபு ஆகியோர் உடன் இருந்ததால் அவர்களிடமும் சாலக்குடி போலீசார் விசாரணை நடத்தினர். ஓராண்டாகியும் கலாபவன் மணியின் மரணம் குறித்த விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால், இவ்வழக்கினை சிபிஐக்கு மாற்றி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையை ஒரு மாதத்திற்குள் சிபிஐ துவங்க வேண்டும் எனவும், விசாரணை அதிகாரிகள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
.

Leave a Reply