அஜித்துடன் விரைவில் நடிப்பேன். கீர்த்திசுரேஷ்

அஜித்துடன் விரைவில் நடிப்பேன். கீர்த்திசுரேஷ்

விஜய் இயக்கத்தில் விக்ரம்பிரபு நடித்த ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை கீர்த்திசுரேஷ் அதன் பின்னர் ‘ரஜினிமுருகன்’, ரெமோ’ ‘பைரவா’ போன்ற படங்களில் நடித்தார். தற்போது அவர் சூர்யாவுடன் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று அவர் சேலத்தில் நகைக்கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டார். அவரை பார்ப்பதற்காக சேலத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். ரசிகர்கள் மத்தியில் கீர்த்திசுரேஷ் பேசியபோது, ‘சேலத்திற்கு முதன்முறையாக வந்துள்ளேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கின்றது. சேலம் ரசிகர்கள் என் மீது வைத்துள்ள அன்புக்கும், ஆதரவுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உங்களது அன்பை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. என்னை பார்க்க, வாழ்த்த வந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

‘பைரவா’ படத்தில் இளையதளபதி விஜய்யுடன் இணைந்து நடித்தேன். அஜித்துடன் விரைவில் நடிப்பேன். சூர்யாவுடன் நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்ற படம் விரைவில் வெளியாகவுள்ளது. அடுத்து விஷாலுடன் ‘சண்டக்கோழி 2′ படத்தில் நடிக்கிறேன்’ என்று கூறினார். கீர்த்திசுரேஷ் வருகையை அடுத்து அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Leave a Reply