சிரியா: கார்வெடிகுண்டு தாக்குதலில் குழந்தைகள் உள்பட 100 பேர் பலி
ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவில் அவ்வப்போது அப்பாவில் பொதுமக்கள் கொல்லப்பட்டு வரும் நிலையில் நேற்று சிரிய அகதிகள் சென்ற பேருந்தின் மீது நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில், 100 பேர் பரிதாபமாக பலியாகினர்.
சிரியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே தீவிரவாதம் தலைதூக்கி இருப்பதால் அந்த நாட்டில் இருந்து பொதுமக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பேருந்துகளில் நூற்றுக்கணக்கான சிரிய அகதிகள் அகதியாக சிரியாவின் இன்னொரு பகுதிக்கு சென்று அங்கிருந்து வெளிநாடு செல்ல திட்டமிட்டனர்.
இந்த பேருந்து ஓரிடத்தில் நின்று அனைவரும் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் அந்த பேருந்துகள் மீது தற்கொலைப்படையை சேர்ந்த தீவிரவாதிகள் கார்வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 100க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் பிஞ்சு குழந்தைகள் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.
தீவிரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு இந்தியா உள்பட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகிறது.