இணைகிறது அதிமுக! மீண்டும் முதல்வர ஆகிறாரா ஓபிஎஸ்?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக, சசிகலா, ஓபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்ததால் கட்சியின் பெயரையும், சின்னத்தையும் இழந்தது. இந்த பிரிவிற்கு சசிகலா குடும்பம்தான் காரணம் என்று கூறப்பட்ட நிலையில் சசிகலா தற்போது சிறையில் உள்ளார். கட்சியை நேற்றுவரை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த தினகரன் இன்று சிறை செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கட்சியின் எதிர்காலத்தை கருதி பிரிந்த இரு பிரிவினர்களும் ஒன்றுசேரவும், நீண்ட வருடங்களுக்கு பின்னர் முதல்முறையாக சசிகலா குடும்பம் இல்லாத அதிமுகவை உருவாக்கவும் நேற்று விடிய விடிய அமைச்சர்கள் ஆலோசனை செய்தனர்.
இந்த ஆலோசனையின்படி இன்று அதிமுக இணையவுள்ளதாகவும், அதிமுகவின் பொருளாளர் மற்றும் முதல்வர் பதவி ஓபிஎஸ் அவர்களுக்கு என்றும், அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி இருப்பார் என்றும் கூறப்படுகிறது. அதே வேளையில் ஓபிஎஸ் அவர்கள் பொருளாளர் மற்றும் பொதுச்செயலாளராக இருப்பார் என்றும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தொடர்வார் என்றும் இன்னும் ஒரு பிரிவினர் கூறி வருகின்றனர்.