மீண்டும் உருவாக்கப்படுகிறதா டைனோசர்? உயிர்க்கரு முட்டை கிடைத்துள்ளதால் பரபரப்பு
அர்ஜெண்டினா நாட்டில் உள்ள அஃகா மகுவோவின் தொல்பொருள் ஆய்வாளர்களின் ஆராய்ச்சிக்குட்பட்ட பகுதியில் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த முட்டைகள் ஆராய்ச்சியாளர்களின் முக்கிய கண்டுபிடிப்பாக கருதப்படுகிறது.
அர்ஜெண்டினால் கண்டெடுக்கப்பட்ட இந்த முட்டைகள் இன்னும் உயிர்க்கருக்களுடன் இருப்பதாகவும், இந்த உயிர்க்கருக்களை வைத்து டைனோசர்களையும் உண்டாக்க முடியுமா? என்ற ஆய்வை நடத்தவுள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட முட்டைகள், தோல், பற்கள் என அனைத்தும் உயர் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த முட்டைகளை வைத்து மீண்டும் டைனோசர்களை உருவாக்க ஒருபக்கம் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது