மோடி வேஷத்தில் சாட்டையால் அடித்து போராட்டம் செய்யும் தமிழக விவசாயிகள்
தமிழக விவசாயிகள் தலைநகர் டெல்லியில் கடந்த் ஒரு மாதத்திற்கும் மேலாக பல்வேறு விதங்களில் போராடி வரும் நிலையில் இன்று ஒரு புதுமையான முறையில் போராடினர்
இன்றைய தினம் விவசாயிகளில் ஒருவர் பிரதமர் மோடி உருவம் தாங்கிய விவசாயிகளை சாட்டையால் அடிப்பது போன்றும், அவரிடம் விவசாயிகள் கெஞ்சுவது போலவும், விவசாயிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உண்மையான சாட்டையால் அடித்ததால் இந்த போராட்டத்தின்போது ஒருவர் மயங்கி விழுந்தார். பின்னர் அவருடைய காயத்திற்கு முதலுதவி அளிக்கப்பட்டு, சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
36 நாட்களாக தொடர்ந்து போராடி வரும் விவசாயிகள் கோரிக்கை ஏற்கப்படுமா? இப்படியே போராடி சோர்ந்துபோய் தமிழக விவசாயிகள் தமிழகம் திரும்புவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்