கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார் டிடிவி தினகரன். அதிமுக மீண்டும் உடைகிறதா?

கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார் டிடிவி தினகரன். அதிமுக மீண்டும் உடைகிறதா?

அதிமுக அம்மா அணியில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கு எதிர்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக கட்சியை வழிநடத்த குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் இனி சசிகலா குடும்பத்திடம் அதிமுக கட்டுண்டு இருக்காது என்றும் நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

மேலும் அதிமுக கட்சி மற்றும் ஆட்சி ஒரு குடும்பத்திடம் மாட்டிக்கொண்டிருப்பதை தொண்டர்கள் விரும்பவில்லை என்றும் தொண்டர்களின் விருப்பத்திற்கு இணங்க கட்சியை சசிகலா குடும்பத்திடம் இருந்து மீட்டு மக்களுக்கு அதிமுக அமைச்சர்கள் முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

மேலும் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை கட்சியில் இருந்து நீக்க முடிவு செய்திருப்பதாகவும் தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அதிமுக தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஆட்சி அமைக்க அனைவரும் சேர்ந்து இந்த முடிவை எடுத்ததாகவும் ஜெயக்குமார் கூறியிருக்கிறார். சசிகலா குடும்பத்தினர்களை வெளியேற்றினால் மட்டுமே இணைப்பு சாத்தியம் என்று ஓபிஎஸ் திட்டவட்டமாக கூறியதால் அதிமுக அம்மா அணியினர் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

.

Leave a Reply