கைதான 3 மணி நேரத்தில் ஜாமீன். இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய விஜய் மல்லையா

கைதான 3 மணி நேரத்தில் ஜாமீன். இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய விஜய் மல்லையா

இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் ரூ.9000 கோடி கடன் பெற்று அதனை திருப்பி செலுத்தாமல் லண்டனில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்த நிலையில் நேற்று மாலை அவர் லண்டன் போலிசாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட விஜய் மல்லையா லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் மூன்றே மணி நேரத்தில் விஜய் மல்லையா நிபந்தனை ஜாமீன் பெற்று வெளியே வந்துவிட்டார்

விஜய்மல்லையா கைது செய்யப்பட்டவுடன் இந்தியா அழைத்து வந்து விசாரிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஜாமீன் பெற்றுள்ளதால் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.

Leave a Reply