ஈரப்பதத்துக்கும் வெயில் கொளுத்துவதற்கும் என்ன தொடர்பு?

ஈரப்பதத்துக்கும் வெயில் கொளுத்துவதற்கும் என்ன தொடர்பு?

“என்னடா… பத்து வருஷத்துக்கு முன்னாடியும் இதே சென்னைல தான இருந்தோம், என்ன தான் சென்னை வெயிலுக்கு ஃபேமஸ்னாலும் இவ்ளோ வெயில பாத்ததே இல்லையே.. முடியலடா சாமி!!”ன்னு தினமும் பொலம்பிட்டு இருக்கீங்களா? வடிவேல் என்னன்னு சொல்லிட்டு அடிங்க டான்னு சொல்றா மாதிரி, ஏன் இவளோ வெயில்ன்னு தெரிஞ்சிகிட்டே ஆகணும்னு ஆர்வமா இருக்கீங்களா? யாரு கிட்டயாச்சு இந்த கேள்விய கேட்டா ஒன்னு “எனக்கு வெயில் அடிக்கறது மட்டும் தான் தெரியும், ஏன்னுலாம் தெரியாது”ன்னு சொல்லிட்டு போயிட்டே இருப்பாங்க. அப்டி இல்லனா “சன் ரொம்ப ஹாட், வெயில் ரொம்ப கொளுத்திங், குளோபல் வார்மிங், ஓசோன்”ன்னு சம்மந்தமே இல்லாம பேசிட்டு இருப்பாங்க.

நம்ப சென்னையோட திடீர் வெயில் தாக்கத்த பத்தி தெரிஞ்சிக்கனும் கொஞ்சம் அடிப்படை வானிலை அறிவு தேவைப்படும். தேவையான அந்த அடிப்படைய சொல்றதுக்கு தான் இந்த கட்டுரை.

பொதுவா சூரியனுக்கு எந்தத் திசைல பூமி இருக்கோ அதுக்கு ஏத்தா மாறி தான் நமக்கு சம்மர், வின்டர் எல்லாம் அமையுது. அதே மாதிரி வெப்பத்தோட தாக்கம் அதிகமா இருக்கறதுக்கும் கம்மியா இருக்கறதுக்கும் ரெண்டு முக்கியாமான காரணம் இருக்கு. மரங்கள் இல்லாம போனது, காத்த மாசு படுத்தறது – அதுனால பூமியோட உச்சகட்ட வெப்ப நிலை அதிகரிச்சது ஒரு காரணம். இன்னொரு காரணம் காத்துல ஈரப்பதம் (Humidity)கம்மியா இருக்கறது.

காத்துல ஈரப்பதம் கம்மியா இருந்தா ஏன் வெயில் அதிகமா இருக்கு? இத புரிஞ்சிக்க ஒரு சின்ன உதாரணம் எடுத்துப்போம். சில வருஷங்களுக்கு முன்னால, வெயில் காலத்துல வீட்ல இருக்கற பாய் எடுத்து அத தண்ணில நெனச்சு வீட்டு வாசல்ல தொங்க விடுவாங்க அப்பாவும் அம்மாவும். என்ன தான் வெயிலா இருந்தாலும், காத்து அடிக்கறப்ப அந்த பாய்ல இருக்கற ஈரப்பதத்துனால வீடே சில்லுனு ஆகிடும்.

இப்போ இதே லாஜிக்க பூமிக்கு அப்ளை பண்ணுங்க. என்ன தான் சூரிய வெளிச்சம் இருந்தாலும் நம்ப வீட்டு வாசல்ல தொங்குன பாய் மாதிரி பூமி முழுக்க ஈரப்பதம் இருந்தா வெயிலோட தாக்கம் கம்மி ஆயிடும். இன்னிக்கு நம்ப யூஸ் பண்ற வண்டிங்களால பூமியோட வெப்பம் அதிகரிச்சு ஈரப்பதம் எல்லாம் இல்லாம போயிடுச்சு, அதனால சூரிய ஒளியோட தாக்கம் இன்னும் அதிகமா நம்பல வந்து சேருது. இது போதாதுன்னு இப்போ வங்கக்கடல்ல ‘மாறுதா’ அப்டீன்ற புயல் உருவாகி இருக்கு. வர்தாக்கு நேர் ஆப்போசிட்டா இருக்கற இந்த மாறுதா, ஒரு வெப்ப அலை (Heat Wave) கூட கூட்டிட்டு வருதாம்.

ஏற்கெனவே ஈரப்பதம் இல்லாத நம்ப சென்னைல மரம்லாம் வர்தாநால சாஞ்சிடுச்சு. அதனால கொஞ்சம் அதிகமா தான் இந்த வருஷம் இருக்கப்போது வெயில். சொல்லப் போனா இந்த மாறுதா புயல் தமிழ் நாடுலேந்து ஈரப்பதத்த வெளிய இழுக்க நிறைய வாய்ப்பு இருக்கு. ரமணன் சார் பாணில சொல்லணும்னா, “இதனால் தமிழ்நாட்டில், குறிப்பாக வடக்கு தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் சிறிது அதிகமாகவே காணப்படும்.”.

இத எல்லாம் எதிர்த்து ஒரு நிம்மதியான வாழ்க்க வாழனும்னா, “வெயில்ல சமாளிக்க என்ன பண்ண போறீங்க?”ன்னு கேக்கறப்ப, “கூல் ட்ரிங்க்ஸ் குடிப்போம், சன் கிரீம் போடுவோம், கூலிங் க்ளாஸ் போடுவோம்”ன்னு சொல்லாம “மரம் வளர்ப்போம்”ன்னு சொல்லி அத அடுத்த வருஷம் வெயில் வரதுக்குள்ள செஞ்சி முடிப்போம்!

Leave a Reply