ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணைந்தால் யாருக்கு நஷ்டம்
ஜெயலலிதா காலத்தில் இருந்து சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருந்த அதிமுக, ஓபிஎஸ் அவர்களின் புத்திசாலித்தனம், இடைவிடாத முயற்சி மற்றும் பொறுமை ஆகியவற்றின் காரணமாக விரைவில் சசிகலா குடும்பம் இல்லாத அதிமுக என்ற நிலை உருவாகவுள்ளது. ஜெயலலிதாவால் சாதிக்க முடியாத சாதனையை செய்துள்ள ஓபிஎஸ் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணணப்பு ஒருசிலருக்கு நஷ்டத்தை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணைப்பிற்கு பின்னர் தினகரனின் தீவிர ஆதரவாளர்களாக இருந்தவர்கள் கட்சியின் நலன் கருதி ஓரங்கட்டப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினகரன் ஆதரவு அமைச்சர்களை பதவியில் நீடிக்கச் செய்வதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் நெருடல் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக உடுமலை ராதாகிருஷ்ணன், செல்லுார் ராஜீ, ஆர்.பி உதயக்குமார், கடம்பூர் ராஜீ, விஜயபாஸ்கர் ஆகிய ஐவரையும் அமைச்சரவையில் இருந்து கழற்றிவிடும் முடிவில் இருதரப்பும் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால்தான் நேற்று திடீரென அமைச்சர் உதயகுமார் ஓபிஎஸ்-ஐ புகழ்ந்து பேட்டி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு அணிகளின் குழுக்களும் பேச்சுவார்த்தை நடத்தபடும் போது அமைச்சரவை பட்டியலும் இறுதி செய்யபட உள்ளதாகவும், இரண்டு அணியினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைச்சரவை பட்டியல் தயார் செய்யபடும் என்றும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.