மூன்று நாள் அவகாசம் வேண்டும். டிடிவி தினகரன் டெல்லி போலீசாரிடம் வேண்டுகோள்
தேர்தல் கமிஷனால் முடக்கப்பட்ட அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரா என்பவருக்கு பணம் அளித்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கு ஒன்றில் டெல்லி காவல்துறை முன்னிலையில் ஆஜராக 3 நாட்கள் அவகாசம் கேட்டு டிடிவி தினகரன் கடிதம் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரா கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து பணத்தை கைப்பற்றி விசாரணை செய்தபோது டிடிவி தினகரன் கொடுத்ததாக ஒப்புக்கொண்டார்.
அவருஐய வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு டெல்லி காவல்துறையினர், டிடிவி தினகரன் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு டிடிவி தினகரனிடம் நேற்று டெல்லி காவல்துறையினர் நேரில் சம்மன் அளித்தனர். அந்த சம்மனில் வரும் சனிக்கிழமை, டெல்லியில் நேரில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் டெல்லி காவல்துறை முன் ஆஜராகி விளக்கமளிக்க தனக்கு மூன்று நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.