குஷ்பு வெளிநாடு செல்ல அனுமதி கொடுக்குமா நீதிமன்றம்?

குஷ்பு வெளிநாடு செல்ல அனுமதி கொடுக்குமா நீதிமன்றம்?

நடிகையும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளருமான குஷ்பு தான் வெளிநாடு செல்லவிருப்பதாகவும், அதற்காக அனுமதி தர வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

கடந்த 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் பிரச்சாரம் செய்தேன். அப்போது தேர்தல் விதிகளை மீறியதாக ஆண்டிபட்டி போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு ஐகோர்ட் தடை விதித்தது.

தற்போது இந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதால், பாஸ்போர்ட் புதுப்பித்துத்தர மறுக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழ்க்கில் நான் வெளிநாடு செல்லும் போது எந்த நாட்டுக்கு செல்கிறேன், எங்கு தயங்குறேன் என்று தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்தநிலையில் நான் குடும்பத்துடன் வருகிற 24–ம் தேதி முதல் மாதம் மே 14–ந்தேதி வரை பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலா செல்கிறேன். எனவே, நான் வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும்’

குஷ்புவின் இந்த மனு இன்று அல்லது நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்கு பின்னரே அவருக்கு வெளிநாடு செல்ல அனுமதி கிடைக்குமா? என்பது தெரியவரும்

Leave a Reply