தெற்கு திபெத்தை மீட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சீனா மிரட்டல்

தெற்கு திபெத்தை மீட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சீனா மிரட்டல்

இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ள தலாய்லாமா மற்றும் அவரது ஆதரவாளர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்றும்படி சீன அரசு இந்தியாவை கடந்த 50 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. ஆனால் இந்தியா இதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் கடுப்பான சீனா இந்தியாவின் ஒரு பகுதியான அருணாச்சல பிரதேசத்தை குறிவைத்துள்ளது.

சமீபத்தில் அருணாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு தெற்கு திபெத் என்று பெயர் சூட்டிய சீனா, அங்குள்ள மேலும் 6 இடங்களின் பெயரை சீன மொழியில் மாற்றியும் உள்ளது. இதற்கான வரைபடம்கூட விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சீன அரசுக்குச் சொந்தமான #GlobalTimes பத்திரிகையில்,’’தலாய் லாமா விவகாரத்தில் இந்தியா தொடர்ச்சியாக, விரோதம் காட்டிவருகிறது. இதனால், தெற்கு திபெத்தை நாம் மீட்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் இரட்டைவேட அரசியல், அந்நாட்டுக்கே பாதகமான விளைவுகளை தேடித்தரும். இதற்கான விளைவு கடுமையானதாக இருக்கும்,’’ என்று எச்சரித்து, தலையங்கம் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்தியா-சீனா போர் மிக விரைவில் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply