ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி மர்மநபர்களால் கொலை!

ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி மர்மநபர்களால் கொலை!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் காவலாளி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது. இதன் காவலாளி ஓம்பகதூர் நேற்று நள்ளிரவில் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். மேலும் மற்றொரு காவலாளி கிஷன் பகதூர் என்பவர் படுகாயம் அடைந்தார்.

இவர்கள் இருவரும் நேபாளத்தை சேர்ந்தவர்கள் என்றும் இவர்களை காரில் வந்து மர்ம கும்பல் பகதூரை கத்தியால் குத்தி கொலை செய்ததாகவும், கிஷன் பகதூரை கட்டி போட்டு சென்றதாகவும் தகவல்கள் அந்த பகுதியில் உள்ளவர்களிடம் செய்த விசாரணையில் இருந்து தெரியவருகிறது.

சசிகலாவுக்கு சிறை, தினகரன் விசாரணை என சசிகலா தரப்புக்கு அடுத்ததடுத்து நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், இந்த கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்படும் பட்டியலில் இந்த கொடநாடு எஸ்டேட்டும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொள்ளை முயற்சியில் காரணமாக இந்த கொலை நடந்ததா?என்பது குறித்து நீலகிரி எஸ்.பி. முரளி ரம்பா தலைமையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply