முதல் வாரத்தை விட 2வது வாரத்தில் வசூலில் பட்டையை கிளப்பிய பவர்பாண்டி
தனுஷ் இயக்கிய முதல் படமான ‘பவர்பாண்டி’ திரைப்படம் கடந்த ஏப்ரல் 14ஆம் வெளிவந்து அனைத்து தரப்பினர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் முதல் வார இறுதியில் சென்னையில் மட்டும் ரூ.46,29,820 வசூல் செய்து அனைவரையும் வியக்க வைத்தது.
இந்த இந்த படத்தின் இரண்டாவது வார சென்னை வசூல் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படம் சென்னையில் இரண்டாவது வாரத்தில் ரூ.53,86,080 வசூல் செய்துள்ளது. முதல் வாரத்தை விட சுமார் 7 லட்ச ரூபாய் அதிகம் வசூலித்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இன்னும் இந்த படத்திற்கு நல்ல கூட்டம் வந்து கொண்டிருப்பதால் சென்னை வசூல் சாதனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த படம் ரிலீஸ் தினமான ஏப்ரல் 14ஆம் தேதியில் இருந்து 23ஆம் தேதி வரை ரூ.1,44,25,810 சென்னையில் மட்டும் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.