நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

 மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில், இளநிலை படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு (NEET) நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நாடு முழுவதும் பரவலாக இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது. ஆனாலும், மருத்துவ நுழைவுத் தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இதனையடுத்து, நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாகியுள்ளது.

இதனைத்தொடர்ந்து நடப்பு கல்வியாண்டிற்கான நீட் தேர்வு வருகிற மே மாதம் 7-ம் தேதி நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு, அத்தேர்வுக்கு விண்ணப்பிக்க www.cbseneet.nic.in என்ற இணையத்தளத்தில் கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாணவர்களிடம் இருந்து பெறப்பட்டன.

நடப்பாண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் சுமார் 11,35,104 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு, ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்ப எண், பிறந்த தேதி மற்றும் ரகசிய குறியீடு மூலம், இந்த இணையதள முகவரியில் http://cbseneet.nic.in/cbseneet/Online/AdmitCardAuth.aspx ​ ஹால் டிக்கெட்டை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கடந்த ஆண்டில் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களின் எண்ணிக்கையை விட, இந்த ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply